2009-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள மூர் மார்க்கெட் புறநகர் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்ட புறநகர் பயணிகள் ரயில், அதிவேகமாக வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 11 பயணிகள் காயமடைந்தனர். இந்தியாவில் இரயில் நிலையம் உருவாக்கப்பட்டு இப்போது வரை இதுவே முதல் ரயில் கடத்தலாகும்.