திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், சினிமாவில் யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தை பேசுவதுபோல பேசுவது அரசியலில், பொது வாழ்க்கையில் எடுபடாது என்பதை புதிதாக அரசியலில் கால்பதிக்கும் நடிகருக்கு பாலபாடமாக சொல்லிக் கொடுக்கிறோம். அரசியல் வரலாற்று பாடங்களை படித்தால் தான் புரியும், அது பாயாசம் குடிக்கும் வேலையல்ல, நீட் விவகாரத்தில் மாநில அரசை குறைகூறுவது நிர்பந்தமா என கேள்வியெழுப்பியுள்ளார்.