நாமக்கல் பூங்கா சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் பொதுமக்கள் கமலய குளக்கரையை சுற்றிப் பார்க்கும் வகையில் படகு விடப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்யும் பொதுமக்கள் உரிய பாதுகாப்பு உடைகளின்றி பயணம் செய்கின்றனர். அதேபோல் அளவுக்கு அதிகமாக படகுகளில் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். பெரிய விபத்து ஏற்படும் முன் நாமக்கல் மாநகராட்சி தடுக்குமா என பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.