தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு, நாளை (ஜன.14) முதல் 16ஆம் தேதி வரை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 17ஆம் தேதியும் விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்தது. பொங்கலுக்கு சொந்த ஊர் சென்ற மக்கள், விடுமுறையை கழித்து மெதுவாக திரும்ப ஏதுவாக இந்த அறிவிப்பை வெளியிட்டது. மேலும், 18, 19ஆம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் விடுமுறை வருகிறது.