நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுலா தலமாக விளங்குகிறது. விடுமுறை நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் காணப்படும். இங்கு வரும் பொதுமக்கள், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்மருவிகளில் குளித்து மகிழ்வது வழக்கம். கடந்த வாரம் கொல்லிமலையில் பெய்த கனமழையால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.