பெரியார் குறித்து அவதூறாகப் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருச்செங்கோடு காவல் நிலையத்தில் நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகத்தினர் நேற்று புகார் அளித்தனர். திராவிடர் கழக இளைஞரணி தலைவர் ஆனந்தகுமார் கணேசன் தலைமையில் திமுக திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளர் வட்டூர் தங்கவேல் உள்ளிட்ட பலர் கூட்டாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.