சேந்தமங்கலம்: தத்தகிரி மலையில் கிருத்திகை சிறப்பு பூஜை

84பார்த்தது
சேந்தமங்கலம்: தத்தகிரி மலையில் கிருத்திகை சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள தத்தகிரி மலை மீது அருள்மிகு ஶ்ரீ முருகப்பெருமான் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மார்கழி மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 9) மூலவர் முருகப்பெருமானுக்கு அதிகாலை நடை திறக்கப்பட்டு பலவித வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமாக ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. பிறகு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி