கொல்லிமலை வட்டம், சேளூர்நாடு, தின்னனூர் நாடு, தேவனூர் நாடுகளில் சுமார் 5000 மேற்பட்ட குடும்பங்களில் சுமார் 15000 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் போதிய தார் சாலை இல்லாத காரணத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர் மேலும் அவசர காலத்தில் செல்ல முடியாமல் இருப்பதால் இதனை கண்டித்து நேற்று
நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மலைவாழ் மக்கள் கலந்த கொண்டனர்.