முலாம்பழம் இனிப்புச் சுவையும், நறுமணமும் கொண்டது. இது உடல் உஷ்ணத்தை போக்க கூடியதும், வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் இரும்புச் சத்துக்கள் கொண்டது. முலாம்பழத்தினை உண்டுவர மூல நோய் குணமாகும். மலசிக்கல் நீங்கும். அஜீரணத்தை அகற்றி பசி ருசியை ஏற்படுத்தும். முலாம்பழத்தின் சதை மற்றும் விதையுடன் சிறிதளவு சீரகப்பொடி சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடிப்பதால் உடலுக்கு உற்சாகம் கிடைக்கும்.