பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாக வரும் புகார்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். மேலும் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கே கட்டணம் வசூலிக்கப்படுவதாக விளக்கமளித்தார். முன்னதாக அரியலூரில் புதிய வழித்தடத்தில் பேருந்துகளை தொடங்கி வைத்தார்.