பாகிஸ்தான்: குவெட்டா நகர் சஞ்ஜிதி பகுதியருகே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வாயுவெடிப்பில் சிக்கி பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 9-ம் தேதி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வாயுவெடிப்பால் சுரங்கத்தின் ஆழத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் பலர் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தனர். இதையடுத்து, 4 நாட்களாக மீட்புப்பணி தொடர்ந்து வரும் நிலையில், 12 தொழிலாளிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.