நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை சூழல் நிறைந்த பகுதியான கொல்லிமலை அமைந்துள்ளது இங்கு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி நம் அருவி மாசிலா அருவி போன்ற அருவிகள் உள்ளன தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான பொதுமக்கள் கொல்லிமலைக்கு படையெடுத்து வருகின்றனர் மேலும் அங்குள்ள அருவிகளில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். குளிரான சூழ்நிலை நிலவி வரும் காரணத்தால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் செல்கின்றனர்