கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ‘Ok Credit’ என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கிருந்து பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு, அந்நிறுவனத்தின் CEO ஹர்ஷ் போக்கர்னா, வேறு நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுத்து வருகிறார். இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்ட 70 பேரில், 68 பேருக்கு வேறு நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது எங்களின் தவறு. இதற்கு நாங்களே பொறுப்பேற்கிறோம்" என தெரிவித்துள்ளார்.