மதுரை மாவட்டத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “2019ஆம் ஆண்டு முதல் இணை பிரியாமல் இருக்கிறோம். இந்த கூட்டணியில் விரிசல் ஏற்படாதா? என்ற நப்பாசையில் சில வெளி நபர்கள் தொடர்ந்து செயல்படுகின்றனர். அவர்களுடைய எண்ணம் நிறைவேறாது. கூட்டாட்சி என்றாலே மத்தியில் ஆளும் பாஜகவுக்கு அலர்ஜி. மத்திய அரசால் எனக்கும், கேரள முதல்வர் பினராயிக்கும் தான் பெரும் பாதிப்பு” என்றார்.