25 வது திருமண நாளில் மேடையில் நடனமாடியவர் நொடியில் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் பரெய்லியைச் சேர்ந்த ஷூ கம்பெனி நிறுவனர் வாசிம். இவர் தனது 25 வது திருமண நாளை சிறப்பித்தபோது மனைவியின் கையைப் பிடித்து நடனமாடினார். அப்போது மயங்கி சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பான கலங்கவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. வாசிமை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தபோது மரணம் உறுதி செய்யப்பட்டது.