திருப்பத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்த வெங்கடேஷன் என்பவர் தனது நான்கு வயது குழந்தையுடன் காரில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த குழந்தை கியர் போட்டதாக தெரிகிறது. இதில், அதிவேகமாக சென்ற கார், தனது வீட்டின் முன்பு நின்றிருந்த முத்து என்ற முதியவர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட முதியவர் படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.