வெட்டி வேரைக் கொண்டு செய்யப்படும் தட்டிகளை ஜன்னல்களில் கட்டினால் அறையின் வெப்பத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தரும். அதன் தட்டிகளில் நீர் தெளித்து, அதன் மூலம் உருவாகும் வாசனை காற்றை சுவாசிப்பதால் மன அமைதி ஏற்படுகிறது. வெட்டி வேர் எண்ணெயை கை, கால் பிடிப்புகளுக்கு தடவி வந்தால் சிறப்பான பலன் கிடைக்கும். தலையணைக்கு அடியில் ஒரு துண்டு வெட்டி வேர் வைத்துவிட்டால், நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.