தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தொடர்ந்து அதே பகுதிகளில் நீடிப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் அது தாமதமாகியுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த பகுதி உருவாகக்கூடும் எனவும் அதற்கடுத்த 2 நாட்களில் மேற்கு திசை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.