மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று (நவ. 10) இரவு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை தாக்க முயற்சி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் வந்த அதிமுக நிர்வாகி தினேஷ்குமார் மீது நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அமமுக நிர்வாகிகள் என கூறப்படும் நிலையில் பேரையூர் டிஎஸ்பி சித்ராதேவி தலைமையிலான போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.