மதுரை டிவிஎஸ் நகர் சத்யாசாய்நகர் 4ஆவது குறுக்குதெரு பகுதியில் வசித்து வரும் பிரபல எழுத்தாளரும் ஆன்மீக சொற்பொழிவாளருமான இந்திரா சௌந்தராஜன் இன்று காலை அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் நாவல்கள் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரை கதைகள் எழுதி வரும் இவர் புராணங்கள் இதிகாசங்களை கலந்து கதைகளில் எழுதுவதில் வல்லவராக திகழ்ந்துள்ளார். இவருடைய கதைகள் பொதுவாக அமானுட நிகழ்வு தெய்வீக தலையீடு மறுபிறவி பேய்கள் போன்ற விஷயங்களை உள்ளடக்கி இருக்கு இவர் கதைகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்கள் தெரிவித்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ளன அளவு பிரபலமான எழுத்தாளராக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது இவரது மறைவு குடும்பத்தினர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இவர் 700 சிறுகதைகள், 340 நாவல்கள் மற்றும் 105 தொடர்களை எழுதியுள்ளார். சிருங்காரம், ஆனந்தபுரத்து வீடு, இருட்டு ஆகிய திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். மர்ம தேசம், சொர்ண ரேகை, விடாது கருப்பு போன்ற புகழ்பெற்ற கதைகளை எழுதியுள்ளார். இவரின் படைப்புகள் தொலைக்காட்சி தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வந்துள்ளன.