மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் நிலையூர் 1வது ஊராட்சிக்குட்பட்ட கூத்தியார்குண்டு கிராமத்தில் பழம்பெருமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. கடந்த மாதம் திருக்கோயிலில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இன்று (அக். 15) காலை 48 வது மண்டல பூஜை நாளை முன்னிட்டு கும்பம் வலம் வந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.