மேலூர்: பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்..

65பார்த்தது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட இருந்த டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை, "டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு" சார்பில் ஆரம்பம் முதல் கிராமம், கிராமமாக சென்று மக்களை திரட்டி போராட்டம் நடத்தி வந்தனர். இதில் கம்பூரை சேர்ந்த செல்வராஜ் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். நேற்று (ஜன. 23) ஒன்றிய அரசு ரத்து செய்ததை தொடர்ந்து மேலூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கூட்டமைப்பினர் கொண்டாடினார்கள்.

தொடர்புடைய செய்தி