மதுரை: அழகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ரஜனிகாந்த் மகள்

56பார்த்தது
மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் மலை அடிவாரத்தில் உள்ள 18 ம்படி கருப்பண்ணசாமி கோவிலுக்கு இன்று (மார்ச். 8) நண்பகலில் வருகை தந்த சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் விசாகன் ஆகியோர் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அங்கு கோவில் சார்பில் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. ரஜினிகாந்தின் மகள் அழகர் கோவிலுக்கு வந்ததை அறிந்த ரஜினிகாந்தின் ரசிகர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். ஒரு சிலர் ரஜினிகாந்த் மகளுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அவர்களுடன் மதுரை மாவட்டரஜினிகாந்த் நற்பணி மன்ற இளைஞரணி செயலாளர் காமாட்சி உடன் வந்திருந்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி