மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகி உடைய இல்ல விழாவில் கலந்து கொண்ட திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, திருமண வைபவத்தை நடத்தி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
மக்காச்சோளத்திற்கு ஒரு சதவீதம் செஸ் வரி விதிக்கப்பட்ட நிலையில் , அது நீக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் துணை முதல்வர் ஆகியோரிடத்தில் எனது கோரிக்கையை வைத்தேன்.
அந்த கோரிக்கையின் பலனாக தற்போது முதல்வர் அவர்கள் எனது கோரிக்கையை ஏற்று தற்போது தமிழக அரசு ரத்து செய்துள்ளது
முதல்வர் அவர்களுக்கு எனது நன்றி.
நேற்றைய தினம் தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்தேன். விவசாயிகள் சார்பாகவும் மதிமுக சார்பாகவும் தமிழக முதல்வர் அவர்களுக்கு எனது நன்றி.
சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி தொழிலை நம்பி லட்சக்கணக்கான குடும்பங்கள் இருந்து வரக்கூடிய வேளையில் பிளாஸ்டிக் லைட்டர்கள் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன அதேபோன்று பிளாஸ்டிக் லைட்டர்களுக்கான உதிரி பாகங்கள் தமிழகத்தில் தயார் செய்யப்படுகிறது. அவற்றை விற்பனை செய்வதற்கு நமது தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். இதனால் தீப்பெட்டி தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.