மதுரை அருகே கொடிக்குளத்தை சேர்ந்த முத்துலெட்சுமி (வயது 40) பூ வியாபாரம் செய்து வருகிறார், இந்நிலையில் தனது மகளின் புதுமனை புகு விழாவிற்காக நேற்று முன்தினம் (பிப். 9) மாலை ஒத்தக்கடையில் பொருட்களை வாங்கி சரக்கு வாகனத்தில் ஏற்றி கொண்டிருந்த போது, வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று முத்துலட்சுமி மீது மோதியதில் முத்துலட்சுமிக்கு வலது கால் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து முத்துலட்சுமி சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், காரை ஓட்டி வந்த நபரை கைது செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். காரை ஓட்டி வந்த நபர் மது போதையில் இருந்தாரா? அல்லது கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நடந்ததா என ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.