மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மேலூர் தொகுதி திமுக சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று (மார்ச் 16) காலை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் 1049 காளைகளும், 550 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இப்போட்டியின் போது 70 பேர் காயமடைந்ததில் 20 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் மாடுபிடி வீரரும் முதுகலை பட்டதாரியுமான சோழவந்தான் அருகே உள்ள கசிராயிருப்பை சேர்ந்த மகேஷ் பாண்டி (25) என்பவர் மாடு பிடித்தபோது படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.