“திமுக அரசின் சாதனைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், சாட்டையால் கூட அடித்துக்கொண்டார்கள். அப்படியும் எதுவும் நடக்காததால், இறுதியில் சம்பந்தமே இல்லாத இடத்தில் சோதனை நடத்தியுள்ளனர். எந்த FIR-ன் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்று கேட்டதற்கு, இன்றுவரை பதில் இல்லை.
2021 தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு என வாக்குறுதி இல்லை. எனினும், 603 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன" என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.