கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவிக்கு, தேர்வு அறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ரமேஷ் (44) கைது செய்யப்பட்டுள்ளார். தேர்வு மையத்தில் பள்ளி மாணவி, உயிரியல் தேர்வு எழுதியுள்ளார். அப்போது, அறையின் மேற்பார்வையாளராக இருந்த ரமேஷ், மாணவியின் தோளில் கை வைத்து, தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, தேர்வு முடிந்த பின் சோகமாக இருந்துள்ளார். அவரிடம் தலைமை ஆசிரியர் விசாரித்தபோது இச்சம்பவம் தெரியவந்துள்ளது.