பட்டியலின வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தவெக மாவட்டச் செயலாளர் தலைமறைவாக உள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் பட்டியலின மாற்றுத்தினாளி வழக்கறிஞர் பாலமுருகனை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தூத்துக்குடி மேற்கு மாவட்ட தவெக மாவட்ட செயலாளர் வீ.ஜி.சரவணன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள சரவணனை கைது செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் பாலமுருகன் கோரிக்கை வைத்துள்ளார்.