'சமைத்துவிட்டேன், சாப்பிடுங்கள் கௌரவ்" என கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு கேந்திரிய வித்யாலயா ஆசிரியை அன்விதா ஷர்மா (29) தற்கொலை செய்துகொண்டுள்ளார். 'என் கணவர் என் வேலையைதான் திருமணம் செய்துள்ளாரே தவிர என்னையல்ல. என் மகனும், என் கணவரைபோல ஆகிவிடக்கூடாது; அவனை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்' என இறப்பதற்கு முன் பெற்றோருக்கு கடிதம் எழுதியுள்ளார். கணவர், மாமனார், மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.