மதுரை மாவட்டம் சோழவந்தான் கீழ ஒட்டுப்பச்சேரி வைகை ஆற்றின் கரையோரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் அழுகிய நிலையில் கிடப்பதாக நேற்று (மார்ச். 16) சோழவந்தான் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு சென்ற சோழவந்தான் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் அடையாளம் தெரியாத நிலையில் இருந்ததால் வைகை ஆற்றில் நீரில் அடித்து வரப்பட்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றனரா? என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.