சேலம் மாவட்டத்தில் சப்பாத்தியுடன் சேர்த்து சிக்கன் சாப்பிட்ட வட மாநில தொழிலாளி மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பைரன் முரமூ (38) என்பவர் தனது மனைவியுடன் வாழப்பாடியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி இரவு, சாப்பாத்தியுடன் சிக்கின் சாப்பிட்ட அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.