ஊத்தங்கரை - Uthangarai

ஊத்தங்கரை கிளைச் சிறை புதுப்பிக்க ஆய்வு

ஊத்தங்கரை கிளைச் சிறை ரூ. 20 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி தொடக்கம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கிளைச் சிறை கொரோனா காலத்தில் மூடப்பட்டது, இதனால் காவல்துறை, வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் கிருஷ்ணகிரி, சேலம் செல்ல வேண்டி உள்ளதால் ஊத்தங்கரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உச்ச நீதிமன்றம் கிளைச் சிறையை புதுப்பித்து திறக்க உத்தரவு பிறப்பித்தது, அதனடிப்படையில் ரூ. 20 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி நடைபெற தமிழ்நாடு வீட்டு வசதி கழக உதவி செயற்பொறியாளர் ஆய்வு செய்தார்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி