கனமழையால் சாலையில் குறுக்கே விழுந்த புளியமரம்.

75பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கன மழை பெய்தது. இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. தொடர் மழையால் பல்வேறு இடங்களில் தேங்கிய மழை நீரால் இயல்பு வாழ்க்கை பதித்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை தாலுகா காவல் நிலையம் அருகில் உள்ள காமராஜர் நகர் என்ற பகுதியில் கிருஷ்ணகிரி ராயக்கோட்டை செல்லும் சாலையில் இருந்த புளிய மரம் சாலையில் சாய்ந்து விழுந்தது.

இதனால் கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அளித்தும் நெடுஞ்சாலைத்துறையினரோ அல்லது பஞ்சாயத்து நிர்வாகமோ சம்பவ இடத்திற்கு கூட வராத நிலையில்

கிருஷ்ணகிரி மாவட்ட அதிவிரைவு படையினர் ஏ. டி. எஸ். பி சங்கர் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் கிடந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் கிடந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்த அதிவிரைவு படையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you