ஊத்தங்கரையில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்.

51பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில்
மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி, உயர்த்திய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டி. எம் தமிழ்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. இ. கே கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில்,
நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம்,
ஒன்றிய கழகச் செயலாளர்கள் வேங்கன், வேடி , சக்கரவர்த்தி, நரேஷ் குமார், சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில், பேரூராட்சி அலுவலகம் முன்பு ரத்து செய் ரத்து செய், கல்வி கடனை ரத்து செய், ஏறிபோச்சு மின்கட்டணம் ஏறி போச்சு, கட்டு படுத்து போதைபொருள் புழக்கத்தை கட்டுபடுத்து, குடிநீர் வரியை குறைத்திடு, உள்ளிட்ட வாசகங்கள் பொரிந்திய பதாகைகள் ஏந்தி ஆளும் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலியாக ஊர்வலமாக வந்தனர். இதில் மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீத், மாவட்ட இணை செயலாளர் மணிவண்ணன், மாவட்டம் மருத்துவ அணி இளையராஜா, முன்னாள் நகர செயலாளர் சிவானந்தம், முன்னாள் ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருஞானம், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமன், மீனா சக்தி, மலர்கொடி சுந்தர வடிவேல், பழனியம்மாள் மனோகரன், பூமலர் ஜீவானந்தம், குப்புசாமி, ராமன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை பேரூர் கழக செயலாளர் அம்ஜத், சிறுபான்மை பிரிவு பேரூர் கழகத் தலைவர் ஷாயின்ஷா முனாப் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி