கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம், அரசுத் துறைகள், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய தொழிற்கடன் வசதியாக்கல் (Loan Facilitation drive) மற்றும் கல்விக்கடன் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு 20 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1 கோடியே 20 இலட்சத்து 43 ஆயிரத்து 800 மதிப்பில் கல்விக் கடனுக்கான காசோலைகளை இன்று (24. 10. 2024) வழங்கினார். உடன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு. பிரசன்ன பாலமுருகன், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் திரு. சரவணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.