கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் நெடுங்கல் கிராமத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த பொதுக்கூட்டம் காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமையில், மாவட்ட பிரதிநிதி சின்னதுரை வரவேற்புயில்,
சிறப்பு அழைப்பாளராக கழக செய்தி தொடர்பாளர் சமரசம், முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ண ரெட்டி,
கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் சங்கரதாஸ், தலைமைக் கழக பேச்சாளர் கோபி ஆகியோர் கலந்து கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் ஆரம்பித்து 53 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது , புரட்சி தலைவி ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபட வேண்டும் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை எடுத்து உரைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி. வி ராஜேந்திரன், பர்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன்,
எம். ஜி. ஆர் மன்ற செயலாளர் கோ. ரவிசந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கார்த்திகேயன், வர்த்தக அணி தூயமணி, சார்பு அமைப்பு சிட்டி ஜெகதீசன், ஊராட்சி மன்ற தலைவர்
கவிதா பழனி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.