கருப்பு பேட்ச் அணிந்து பணி செய்த மருத்துவர்கள்.

56பார்த்தது
ஊத்தங்கரையில் கருப்பு பேட்ச் அணிந்து பணி செய்த
மருத்துவர்கள்.
ஊத்தங்கரை அரசு மருத்துவர் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மருத்துவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பணி செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை
மருத்துவ அலுவலர் (பொறுப்பு) மீது பொய்யான குற்றச்சாட்டு மற்றும் பணியிடை மாறுதல் செய்ததை எதிர்ப்பு தெரிவித்து ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஒரு நாள் பணி செய்தனர். இதுதொடர்பாக முன்னாள் மாவட்ட இனை இயக்குநர் டாக்டர். தேவராஜ், மூத்த மருத்துவர்கள் பத்மநாதன், முருகேசன், சென்னம்மாள் ஆகியோர் தலைமையில் தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள்
தெரிவித்தது,
டாக்டர் மதன் இரண்டு வருடத்தில் மருத்துவமனை வளர்ச்சிக்காக செய்த சாதனைகளை எடுத்துரைத்து, பொய்யான குற்ற சாட்டை தெறித்த செவிலியர் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நாங்கள் அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்து ஒரு நாள் முழுவதும் பணி செய்வதாக தெரிவித்தனர், மேலும் இதே நிலை தொடர்ந்தால் அடுத்த கட்டமாக உண்ணாவிரதம் , வேலை நிறுத்தம் போன்ற போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி