போச்சம்பள்ளி வார சந்தையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தை மற்றும் அதனை சுற்றியுள்ள உணவகம், இறைச்சிக்கடைகள், பேக்கரிகள், மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் லட்சுமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது முறையான லேபிள் விவரம் இல்லாத 3 கிலோ பேக்கரி உணவு பொருள்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டப்படி பாலிதீன் பைகள் பயன்படுத்தியதற்கு ரூ. 2 ஆயிரம் வீதம் 4 கடைகளுக்கு 8, 000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் 4-ங்கு உணவு மாதிரிகள் சேகரிப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது ஆய்வின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.