மதுரை மாவட்டத்தில் மஞ்சம்பட்டியில் தென்னந்தோப்பில் செயல்பட்டு வரும் தனியார் ரிசார்ட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 11 பெண்கள் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கோவையைச் சேர்ந்த செந்தில்குமார் - ஜெயலட்சுமி தம்பதி வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் கவர்ச்சி விளம்பரங்கள் கொடுத்து இளைஞர்களுக்கு வலைவிரித்தது அம்பலமாகியுள்ளது. தற்போது இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.