கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மாடரஹள்ளி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பூங்காவனம் மகன் வீரா (33) இவர் பெங்களூரு பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன் றில் மருந்தாளுனராக வேலை பார்த்து வருகிறார்.
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்த வீராவை அதே பகுதியை சேர்ந்த வேலு (33) என்பவர் நேற்று முன்தினம் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் வீராவுக்கு உடலில் பல்வேறு இடங்களில் பல் வேறு இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது. இதில் காயம் அடைந்த வீராவுக்கு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுசேர்க்கபட்டார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வேலு மனைவிக்கும், வீராவுக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும், இந்த விவகாரத்தில் வீராவுக்கு கத்துக்குத்து விழுந்ததும் தெரிய வந்ததது. இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள வேலுவை போலீசார் தேடி வருகின்றனர்.