திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மனைவியை கொலை செய்து விட்டு டெல்லியில் பதுங்கியிருந்தவரை 11 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸார் கைது செய்துள்ளனர். நெல்லையைச் சேர்ந்த செல்வி என்பவரை காதலித்து திருமணம் செய்த பானிபூரி வியாபாரியான சுரேஷ் ஷா, 2013-ம் ஆண்டு அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது பதிவாகியிருந்த சுரேஷ் ஷாவின் கைரேகை பதிவை கொண்டு அவர் பீகாரைச் சேர்ந்தவர் எனவும் டெல்லியில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தும் கைது செய்தனர்.