கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அடுத்துள்ள சின்ன பனமுட்லுவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது செங்கல் சூளையில் தேன்கனிக்கோட்டை அடுத்த திம்ஜேப்பள்ளியைச் சேர்ந்த ராஜா (45), இவரது மனைவி மாதம்மாள் ஆகியோர் 2 மாதங்களாக வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை செங்கல் சூளை வேலை செய்த போது
அங்கிருந்த மின்சார ஒயரை எடுத்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் அவரை தாக்கியது. இதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொழிலாளி ராஜாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர்.