கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, அதன் சுற்று வட்டபார உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஏக்கர் கணக்கில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இங்கு சாகப்படும் தக்காளி பல்வேறு சந்தைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த வாரங்களில் வரத்து குறைந்ததால் கிலோ தக்காளி கடந்த வாரங்களில் ரூ. 30 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் மழை பெய்ததால் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் சந்தைக்கு நக்காளி வரத்து அதிகரித்து விலை சரிய தொடங்கியது. நேற்றைய நிலவரப்படி6கிலோ தக்காளி ரூ. 100க்கு விற்றது