கீழ்குளம்: வாய்க்கால் உடைப்பு பார்வையிட்ட பேரூராட்சி தலைவர்
கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசகுளம் வழியாக தேங்காய் பட்டினம் கடலில் கலக்கக்கூடிய வாய்க்கால் செல்கிறது. இதில் அரசகுளம் பகுதியில் மட்டும் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. தற்போதைய தொடர் மழையால் அரசகுளம் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் தண்ணீர் நிரம்பி விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட இந்த பகுதியை இன்று (4ம் தேதி) கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ரகுநாதன் மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடத்தினை ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தகவல் தெரியப்படுத்தி உடனடியாக போர்க்கால அடிப்படையில் அந்த உடைப்பை பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து அந்த பணியை சரி செய்வதாக தெரிவித்தனர். உடன் கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கோபால் மற்றும் ஊர் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.