திற்பரப்பு: 5 நாளாக குளிக்க தடை;சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

53பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில்  கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்தது. இதில் கடந்த வாரம் தொடர் மழை பெய்து வந்ததால் குமரி மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்களும் நிரம்பின. இதனால் பொதுமக்களின் இயல்பு  வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.

       இதற்கிடையில் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. குறிப்பாக பேச்சிப்பாறை அணையிலிருந்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதனால் கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருகில் உள்ள திற்பரப்பு  அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  

      இதையடுத்து திற்பரப்பு அருவியில் கடந்த நான்கு நாட்களாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று (30-ம் தேதி) ஐந்தாவது நாளாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் காலையிலே வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.   அருவியின் வெளியில் நின்று அருவி அழகை மட்டும் பார்த்து ரசித்து விட்டு சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி