உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் குபி அருகே சென்று கொண்டிருந்த போது பேருந்து எதிர்பாராத விதமாக ராம்நகரில் உள்ள பவுரி-அல்மோரா எல்லையில் 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இக்கோர விபத்து இந்தியாவை உலுக்கியுள்ளது.