தக்கலை: தமிழ்த்திருவிழா நிகழ்ச்சி; விருதுகள் வழங்கிய எம். பி

76பார்த்தது
இந்தியப் பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை சார்பில் குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த 68ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு  தமிழ்த்திருவிழா என்ற தலைப்பில் விருது வழங்குதல் மற்றும் நூல் வெளியீட்டு விழா தக்கலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.        சாமிதோப்பு தலைமைபதி தலைமை குரு மகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகித்தார்.    முதற்சங்கு ஆசிரியர் சிவனி சதீஷ் முன்னிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.           தொடர்ந்து தங்கமணி எழுதிய தலைமுறை தள்ளாட்டங்கள், மற்றும் பாமில பேகம் எழுதிய தூரிகையின் தூறல்கள் என்ற கவிதை நூலை வெளியிட்டு  எழுத்தாளர்களுக்கு விருதுகள் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்து சிறப்புரையாற்றினார்.        பின்னர் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருபவர்களுக்கு தமிழ்நாடு சாதனையாளர் 2024 என்ற விருது வழங்கி கவுரவித்தார்.   இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியில் பாரம்பரிய கலையான சிலம்பம், மற்றும் யோக நிகழ்வுகள் மாணவர்கள் நடத்தி காட்டினர்.

தொடர்புடைய செய்தி