மகளிர் உதவி எண் 181 கட்டுப்பாட்டு மையத்துக்கு விண்ணப்பிக்க இந்தியும் தெரிந்திருக்க வேண்டும் என விளம்பரம் செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழ், ஆங்கிலம் மட்டும் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் கீதா ஜீவன், "தவறுதலாக விளம்பரத்தை பதிவேற்றிய இணை இயக்குநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய வேண்டாம்" என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.