புதுக்கடை: தற்காலிக நிவாரண முகாமை பார்வையிட்ட கலெக்டர்

84பார்த்தது
குமரி மாவட்டத்தில் நேற்று முதல் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இன்று (3-ம் தேதி) மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுவிக்கப்படுள்ளது. இந்த நிலையில், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  புதுக்கடை அருகே,   பார்த்திவபுரம் அரசு நடுநிலைப் பள்ளி தற்காலிக நிவாரண முகாமை நேற்று குமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் உதவி ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு எதிர் வரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், புதுக்கடை போலீசார் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி